நெல்லை டவுன் பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
நெல்லை டவுன் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் பணிகள் நிறைவடைந்த நிலையில் அங்குள்ள சாலைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, பணி முடிந்த பகுதிகளில் சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.