சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே 10 கிலோ கஞ்சாவை சூட்கேஸில் வைத்து கடத்தி வந்த கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே பெரிய சூட்கேஸுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சூட்கேஸை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கேரளாவைச் சேர்ந்த ரிஜாஸ் என்பதும், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.