கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரம் மறுநடவு செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை நடைபெறும் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆயிரத்து 600 மரங்கள் வெட்டப்பட்டன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், 262 மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து மறுநடவு செய்யும் பணியானது தன்னார்வலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கஞ்சப்பள்ளி பகுதியில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்ட வேம்பு மரம், சாலையின் ஓரத்தில் மறுநடவு செய்யப்பட்டது.