பூந்தமல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
இந்நிலையில் பூந்தமல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.