ஹிந்தி மொழியை கற்பதற்கு தென் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், அரசு பணிகளில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பது சமுதாய பொறுப்பு என தெரிவித்தார்.
அன்றாட அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே அனைத்து துறைகளிலும் ஹிந்தியை கொண்டு வரமுடியும் என தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தென் இந்தியாவில் அரசியல் பரப்புரைகளை பொருட்படுத்தாமல் இளம் தலைமுறையினர் ஹிந்தி மொழியை கற்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.