ரயில்வே தேர்வுக்கு மத அடையாளங்களை நீக்க தேவையில்லை என ரயில்வே துறையின் இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் நர்சிங் கண்காணிப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் மத அடையாளங்களை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் வர வேண்டும் என நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரயில்வே துறையின் இந்த அறிவிப்புக்கு விஷ்வ ஹிந்து பரிசத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்வு எழுதும் நபர்கள் மத அடையாளங்களை நீக்க தேவையில்லை என தெரிவித்த ரயில்வே துறையின் இணை அமைச்சர் வி.சோமண்ணா, தேர்வு நடைமுறைகளில் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.