கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரியை அறைய முதலமைச்சர் சித்தராமையா கை ஓங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டார். மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற பாஜக மகளிர் அணியினர், காங்கிரஸுக்கு எதிராக கறுப்புக் கொடியை காட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா, காவல் அதிகாரி ஒருவரை மேடைக்கு அழைத்து அவரை அறைய முயன்றார். முதலமைச்சரின் இந்த செயலால் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.