உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பகுதி, வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் விலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பணியில் இருந்த காவலர் அமைதியாக இருந்துள்ளார்.
பின்னர், சிறுத்தை வெளியே சென்றவுடன் அறையின் கதவை பூட்டிக்கொண்டு தற்காத்துக் கொண்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.