கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் சிதிலமடைந்து காணப்படும் திரௌபதி அம்மன் கோயிலை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் கோவில் கட்ட அனுமதி அளிக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பழமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்து காணப்படுவதால் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள இருப்பதாகக் கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் கோயிலை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
எனவே கோயிலை இடித்துவிட்டு அதே இடத்தில் கட்ட அனுமதி அளிக்குமாறு ஒரு தரப்பு மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.