ஆரணி அருகே வீட்டின் படுக்கையறை வரை அத்துமீறி நுழைந்து மன உளைச்சலை ஏற்படுத்திய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
ஆரணி அருகே எஸ்.வி. நகரம் சுப்பிரமணிய கோயில் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் வீட்டிற்கு மின்வாரிய அதிகாரிகள் அடிக்கடி வந்து ஆய்வு என்ற பெயரில் தொல்லை கொடுப்பதாகவும், வீட்டின் படுக்கையறை வரை அத்துமீறி நுழைவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட லோகேஸ்வரன் ஆரணி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் முகாமில் புகார் மனு அளித்தார்.