மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காஸ்பர் ரூட் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.
இதில், 6 க்கு 3, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து நாளை நடைபெறும் நான்காவது சுற்றில் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோத உள்ளார்.