சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தக ஊழியர் ஒருவர் மதுபோதையில் மாத்திரைகள் வழங்கியதாகத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் மாதேஷ் என்பவர் மருந்தக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போல் பணியில் இருந்த போது மது போதையில் மாத்திரைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மாத்திரைகளை மாற்றித் தருவதாகத் தெரிவித்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மருந்தகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து அறிந்த போலீசார் மாதேஷை பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.