புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் லாவகமாகப் பேசி அவரை கீழே கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் வம்பன் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் செல்வகணபதி என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.