முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் மேற்கொண்டாலும், 142 அடி வரை மட்டுமே தண்ணீரைச் சேமித்து வைக்கத் தமிழக அரசுக்கு உரிமை உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்திற்கும் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, புதிய அணை கட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.