மூன்றரை கோடி ரூபாய்க்கு டைட்டானிக் கப்பல் கடிதம் ஏலம் போயுள்ளது.
உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.
ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது.
இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த நிலையில், டைட்டானிக் கப்பலில் இருந்து கர்னல் ஆர்ச் சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. அதனை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கினார்.