குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லாவ்ஜி டாலியா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
காரணம், அவர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மிக அரிதான தயாரிப்பான ஃபவுண்டேஷன் சீரிஸ் டெஸ்லா சைபர்ட்ரக் காரை வாங்கியுள்ளார்.
அவரது மகன் பியூஷ் தெரிவித்த தகவலின்படி, இந்த சைபர்ட்ரக் தற்போது இந்தியாவில் உள்ள ஒரே ஒரு வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் அடிப்படை விலை சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும்.