அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.
கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பிறகு லிபரல் கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் பதவியேற்ற மார்க் கார்னி, சில நாள்களிலேயே அமைச்சரவையைக் கலைத்து தேர்தலை அறிவித்தார்.
கனடாவைக் கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஆளும் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
தற்போதையை நிலவரப்படி, லிபரல் கட்சி 167 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கனடாவில் வெற்றிக் கொண்டாட்டத்தை லிபரல் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஒட்டாவாவில் ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய மார்க் கார்னி, அமெரிக்கா, கனடாவை சொந்தமாக்கிக் கொள்வதற்காக மக்களைப் பிளவுபடுத்த ட்ரம்ப் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், அது ஒருபோதும் நடக்காது எனவும் மார்க் கார்னி தெரிவித்தார்.