அமெரிக்காவின் நெப்ராஸ்காவை பயங்கர சூறாவளி தாக்கியது.
வல்லரசு நாடாக இருந்தாலும் பனிப்பொழிவு, எரிமலை வெடிப்பு, மழை, வெள்ளம் எனத் தொடர்ச்சியான இயற்கை பேரிடர்களால் அமெரிக்கா பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
சமீபத்தில் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வெள்ளம் புரட்டிப் போட்டது. இந்த சூழலில், மற்றொரு பேரிடராக நெப்ராஸ்காவை பலத்த காற்றுடன் பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது.
இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் போன்றவை சேதமடைந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளது.