ஜப்பானில் செர்ரி மலர்களுக்கு அடுத்தபடியாக பூத்துக் குலுங்கும் விஸ்டேரியா பூக்களை மக்கள் பிரமிப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
விஸ்டேரியா என்பது ஃபேபேசியே என்ற பருப்பு குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும். இது ஜப்பானில் வசந்த காலத்தில் பூக்கும் ஒரு பிரபலமான பூ ஆகும்.
அந்தவகையில், டோக்கியோவின் அருகேயுள்ள அஷிகாகா மலர் பூங்காவில் கொடி போல் தரையை நோக்கிப் பூத்து குலுங்கும் இந்த மலர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனை ஜப்பானியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களும் ஆர்வமுடன் பார்ப்பதற்காகக் குவிந்தனர்.