அல்ஜீரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஓரான் மாகாணத்தில் உள்ள ஹை எஸ்சனௌபர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வந்தது.
இந்த சூழலில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஐந்து வீடுகளும் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் அப்தெல்மத்ஜித் டெபவுன் இரங்கல் தெரிவித்துள்ளார்.