நடிகை சமந்தாவின் 38-வது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகை சமந்தா மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
இப்போது Rakt Brahmand: The Bloody Kingdom என்கிற சீரிஸில் நடித்துவருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.