கனடாவில் கார் விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் மக்கள் பூங்கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்து பலர் மீது மோதியது. இதனையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.