சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் பயிற்சி மையத்தைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்றுனர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த போலீசார் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.