சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அவரை கைது செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தொழில்முனைவோருக்கான PUTER எனும் அமைப்பைத் தொடங்க அரசின் நிதியைப் பயன்படுத்தியதாகச் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது.
இதன்பேரில் கைது செய்யப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ஜெகநாதனின் ஜாமினை உறுதி செய்தார்.
அதே சமயம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அவரைக் கைது செய்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.