திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்களை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொல்லுமாங்குடி என்ற இடத்தில் மொத்தமாக நிலம் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வதில் ராஜ்குமார், அன்சாரி, பெரோஸ் கான், கேசவன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் ராஜ்குமாருக்கும், மீதம் உள்ளவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்த எதிர்தரப்பினர், ராஜ்குமாரின் மேலாளர்களான செந்தில், ஆனந்த், மணிகண்டன் ஆகிய மூவரை காரில் அழைத்து சென்று ஓட்டலில் அடைத்து வைத்தனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் உதவி செய்தவர்கள் என 9 பேரை கைது செய்தனர்.