சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானுக்குச் சிறப்பு அலங்காரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை மனமுருகி வழிபட்டனர்.
காத்திருக்கும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கக் கோயில் நிர்வாகம் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, குடிக்க மோர் வழங்கப்பட்டது. மேலும், பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.