பயங்கரவாதத்தில் மதம் பார்க்கக்கூடாது என அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பக வல்லி அம்மன் கோயிலில், அகில பாரத இந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் நாட்டுக்கு நல்லதல்ல எனவும், பயங்கரவாதத்தில் மதம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.