திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு உற்சவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
முருகப்பெருமானுக்குப் பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், தேனி உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டதுடன், தங்கக் கவசம், தங்க வேல் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவ மூர்த்தியான முருகப்பெருமான் தங்கத் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை மனமுருகி வழிபட்டனர்.