தென்காசி அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது சிகரெட் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது நண்பருடன் துப்பாக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார்.
இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களிடம் 3 பேர்கொண்ட கும்பல் சிகரெட் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மாரிமுத்து சிகரெட் தர மறுக்கவே ஆத்திரமடைந்த கும்பல், அங்கிருந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.