திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 24-ம் தேதி அரியன்வாயல் பகுதியில் அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சிலர் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்துத் திருடிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் இருசக்கர வாகனங்களைத் திருடி அதன் பாகங்களைப் பிரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட நால்வரைக் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.