அட்சய திருதியை முன்னிட்டு சேலம் மாநகரில் உள்ள கடைகளில் கல் உப்பு, மஞ்சள், மிளகு ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
அட்சய திருதியை தினத்தன்று தங்கம், உப்பு , மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
இதன் காரணமாக, சேலம் மாநகரில் உள்ள பால் மார்க்கெட், செவ்வாய் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உப்பு, மிளகு, மஞ்சள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
வழக்கமான விற்பனையை விட 2 மடங்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி சேலம் முழுவதும் நூறு டன்னுக்கும் மேலாகக் கல் உப்பு விற்பனை நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.