அட்சய திருதியை தினமான இன்று, தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுப மங்களகர அட்சய திருதியை தினமான இன்று நகைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகைக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
இந்தாண்டின் தொடக்கத்திலிருந்து கடும் உயர்வைச் சந்தித்த தங்கம் விலை, இன்று எவ்வித மாற்றமும் இன்றி சவரன் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.