ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் மின் விநியோகம் சீரானது.
ஸ்பெயினில் மின்வெட்டு காரணமாகத் தலைநகர் மாட்ரிட்டில் தானியங்கி எலக்ட்ரானிக் சிக்னல்கள் செயலிழந்ததை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோன்று பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல் நாடுகளில் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மின் விநியோகம் சீரானது.