இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. தென் இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா எரிமலை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்தது. ஆனால் தற்போது வரை கட்டுக்கடங்காமல் நெருப்பு பிழம்புகளை வெளியேற்றுகிறது.
மேலும், சாம்பல் மற்றும் விரும்புகையைத் தொடர்ந்து வெளியேற்றி வருவதால் மக்கள், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.