களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!
Mar 16, 2026, 10:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இல்லத்தில் பொம்மைகள் எத்தனை இருந்தாலும் செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உண்டாகும் பிணைப்பு தனித்துவமிக்கது. அத்தகைய செல்லப் பிராணிகளின் விற்பனை குறித்து அதனை வாங்குவதில் குழந்தைகள் காட்டும் ஆர்வம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் மணியனூர் சந்தைப் பேட்டையில்  செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

ஆனால் கடந்த சில வாரங்களாக முயல்கள், எலிகள், கோழிகள், வண்ண மீன்கள், பூனைகள் என ஏராளமான செல்லப் பிராணிகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கோடை விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தைக்கு வருகை புரிந்து ஏராளமான செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாகச் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் என்பது குழந்தைகளிடையே நேர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில்  சேலம் வாரச்சந்தையில் பேன்சி கோழி, தாய்லாந்து கோழி, ராக்கெட் குருவி, ஆஸ்திரேலியா பூனை, கண்ணூர் கிளி என விதவிதமாக விற்பனைக்கு வந்திருக்கும் செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற மானுட தத்துவத்தை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வதில் செலுத்தும் ஆர்வத்தை அதனைக் கவனமோடு வளர்ப்பதிலும் செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Tags: Weeding sale: Children are interested in buying petsகுழந்தைகள் ஆர்வம்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் : நயினார் நாகேந்திரன்

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

Related News

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies