தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் மழலையர் பள்ளிகள் - குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!
Oct 4, 2025, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் மழலையர் பள்ளிகள் – குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!

Web Desk by Web Desk
May 2, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சுமார் 3000 மழலையர் பள்ளிகள் அரசின் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெற்ற துயரச்சம்பவங்கள் இனிவரும் காலங்களில் தொடராமல் தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான்  பொருளாதாரத்தை ஈடு செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை PLAY SCHOOL மற்றும் DAY CARE CENTRE-ல் சேர்க்கும் நடைமுறை அண்மைக்காலமாகவே பெருகிவருகிறது. அவ்வாறு சேர்க்கப்படும் மழலைப்பள்ளிகளில் ஒன்றான மதுரையில் இயங்கிவரும் தனியார் மழலைப்பள்ளியில் பயின்ற குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை உயிரிழப்புக்குப் பின் நடைபெற்ற ஆய்வில் அப்பள்ளி அரசின் விதிமுறைகளுக்கு மாறாகவும் உரிய அனுமதியை பெறாமல் கோடை வகுப்புகளை நடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியின் தாளாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளின் தரத்தையும் அதில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இயங்கிவரும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மழலையர் பள்ளிகளில் சுமார் 3 ஆயிரம் மழலையர் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த பட்சம் 5.5 செண்ட் இடம், கட்டட வசதி, வகுப்பறை வசதி, நிர்வாக அனுமதி, தீயணைப்பு வசதிக்காக பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நிலையில், விதிகளை பின்பற்றாமல் விளம்பரங்களால் மட்டுமே பல பள்ளிகள் இயங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 64 மழலையர் பள்ளிகளில் 25 பள்ளிகள் மட்டுமே உரிய அனுமதியோடு இயங்கி வருவதாகவும், மற்ற பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநில தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது

மழலைப் பள்ளிகளில் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடைபெற்ற பின் அதற்கான காரணங்கள் குறித்து ஆராயாமல், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Danger from kindergartens operating without permission in Tamil Naduமழலையர் பள்ளி
ShareTweetSendShare
Previous Post

காஞ்சி காமகோடி பீடம் : 71வது பீடாதிபதி கடந்து வந்த ஆன்மிக பயணம்!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுப்பார் – அமித் ஷா உறுதி!

Related News

மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் தீ விபத்து – ரூ.1.05 கோடி இழப்பு!

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

விஜய்யின் பரப்புரை : தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரம் – மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள்!

அமெரிக்கா : கடல் சீற்றத்தால் 2 வாரங்களில் இடிந்து விழுந்து 9 வீடுகள்!

பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வியட்நாமை தாக்கிய புவலாய் சூறாவளி!

வெனிசுலா : போதைப் பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்!

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies