கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் காட்டு யானை உணவைத் தேடி வரும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
வெள்ளியங்கிரி அடிவாரப் பகுதியில் உள்ள பூண்டி ஆண்டவர் கோயில் சன்னிதி வளாகத்தில் உலா வந்த யானை அன்னதான கூடங்களுக்குச் சென்று அங்கு வைத்து இருக்கும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்திச் சென்றது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் மற்றும் கடைக்காரர்கள் உயிர் பயத்தில் அங்கு இருந்து அலறியடித்து ஓடினர்.
தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் யானையைப் பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.