நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. உழைப்பாளர் தினமான இன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.
படத்தைக் காண குவிந்த ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் தங்களது உற்சாகத்தை வெளிபடுத்தினர்.
இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ரெட்ரோ படம் வெளியான நிலையில், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.