எவோகிஸ் லைட் என்ற விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஒடிஸி நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
இந்த பைக்கின் ரியர் ஹப்பில் எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொடுத்திருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது.
முழுமையான ஃபேரிங் கொண்ட இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பல்வேறு டிரைவிங் மோடுகள், கீலெஸ் இக்னிஷன், மோட்டார் கட்-ஆஃப் ஸ்விட்ச், ஆன்டி-தெஃப்ட் லாக் மற்றும் ஸ்மார்ட் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.