திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லுக்குச் சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்த நிலையிலிருந்த சம்பவம் பயணிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியது.
முன்பக்க படிக்கட்டுக்கு மேலே மழைநீர் வழிவதைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தகர மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் பறந்து செல்லும் நிலையிலிருந்தது.
மக்கள் பயணிக்கும் பேருந்துகளின் தரத்தைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.