ஐபிஎல் சீசனில் இருந்து முதல் அணியாக முதல் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறி உள்ளது.
சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சென்னை அணியின் தரப்பில் சாம் கர்ரன் 88 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்படி தொடர் தோல்விகள் மத்தியில் சிக்கித் தவித்து வரும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அனைத்து விதமான வாய்ப்புகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.