தமிழகத்தில் புதன்கிழமையன்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், புதன்கிழமையன்று 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
சேலத்தில் 102.2 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.
இதேபோல ஈரோட்டில் 103.28 டிகிரி பாரன்ஹீட்டும், தர்மபுரியில் 100.76 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.
இதனிடையே தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் மே மாதத்தில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.