அமெரிக்காவுக்குச் சொந்தமான போர்ட்டோ ரிக்கோ தீவில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம் குறையாமல் நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக போர்ட்டோ ரிக்கோவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.