ஃப்ளோரிடாவில் சாலையோரம் படுத்திருந்த சுமார் 10 அடி நீளமுள்ள முதலையை லாவகமாகப் பிடித்தனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாகாணம் ப்ளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள பினாலஸ் கவுன்டியில் உள்ள நெடுஞ்சாலையின் நடுவே இருந்த புல்வெளியில் முதலை படுத்திருந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் முதலைகளைப் பிடிக்கும் மைக் டிராகிச் என்பவரும் இணைந்து, அந்த முதலையைப் பிடித்தனர்.