வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவிலிருந்து வெளியேறி ஓடிய காளை முட்டியதில், வயதான தம்பதி படுகாயமடைந்தனர்.
வாணியம்பாடி அடுத்த கோவிந்தா புரம் ஊராட்சிக்குட்பட்ட வன்னியபுதூர் பகுதியில் எருது விடும் விழா நடந்தது.
இதில் பங்கேற்ற காளை ஒன்று அங்கிருந்து வெளியேறி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. பெருமாள்பேட்டை பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பார்வையற்ற தம்பதி மீது அந்தக் காளை மோதியது.
இதில் முதிய தம்பதி படுகாயமடைந்தனர். காளையை விரட்டிக் கொண்டு வந்த இளைஞர்கள், அதனைப் பிடித்து அருகிலிருந்த கம்பத்தில் கட்டினர்.
கழுத்தில் படுகாயமடைந்த பார்வையற்ற முதியவரை, அங்கிருந்த மக்கள் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.