அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றனர்.
தொடர்ந்து டி.எஸ்.ஆர்.பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பந்தலில் 12 பெருமாள்களும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.