அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.
தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் விற்பனையில் பாதிப்பு இருக்கலாம் எனத் தெரிவித்த நகைக் கடை உரிமையாளர்கள் 16 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருந்தனர்.
கடந்த ஆண்டு அட்சய திருதியையை ஒட்டி 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 20 டன் எடையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டோ இந்திய அளவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சென்னையில் காலை 6 முதல் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நகை விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.