திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ராமசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி மண்டல பத்திரப்பதிவுத்துறை டிஐஜி-யாக பதவி வகித்து வந்த ராமசாமி, மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் போலியாகப் பதிவு செய்யத் துணைபோனதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
சார்பதிவாளராக பணிக்குச் சேர்ந்த காலம் முதல் பல்வேறு பத்திரப்பதிவு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது புகார்கள் குவிந்துள்ளன.
திமுக ஆட்சிக் காலத்தில் டிஐஜி-யாக பதவி உயர்வு பெற்ற இவர் நேற்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் டிஐஜி ராமசாமியை இடைநீக்கம் செய்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார்.