திண்டுக்கல் மாவட்டம், பழனியில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
பழனி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றும் சிவக்குமார் என்பவர், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த ஒப்பந்ததாரர் மருது என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மருதுவிடம் கொடுத்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியபடி பணத்தை சிவக்குமாரிடம் பணத்தைக் கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கைது செய்தனர்.