திமுக அமைச்சர்களின் மீதுள்ள வழக்குகளுக்காகத் தனி நீதிமன்றமே அமைக்க வேண்டிய நிலை இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் திமுக அமைச்சர்களுக்காகத் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டிய நிலை இருப்பதாக விமர்சித்தார்.
மேலும் ஊழல் பட்டியலில் உள்ள அமைச்சர்களுக்காகத் தனி சிறைச்சாலை அமைக்க வேண்டிய நிலை உள்ளதாகக் கூறிய அவர், திமுக கூட்டத்தில் மதுபானத்துடன் விருந்து வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.